வரிசையில் நின்று ஓட்டு போட்ட நிதியமைச்சர் அருண்ஜெட்லி
குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை ஆரம்பித்து தற்போது விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.
இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்யவுள்ளனர்.
இந்த நிலையில் அகமதாபாத் பகுதியில் உள்ள வேஜல்பூர் என்ற இடத்தில் பூத் எண் 961 என்ற வாக்குச்சாவடியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ஒரு விஐபி என்ற பந்தா இல்லாமல் வரிசையில் நின்று ஓட்டுப்போட்டார். நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஓட்டு போட வரிசையில் நின்றது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.