வரி பாக்கிக்காக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் முடக்கம்: நினைவிடம் ஆவதில் சிக்கல்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது, இந்த இல்லத்தை ரூ. 16.75 கோடி வரி பாக்கிக்காக 2007ம் ஆண்டு முதல் முடக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அலுவலக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
மேலும் வரிபாக்கியை செலுத்திவிட்டால் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்றும் வருமான வரித்துறை அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.