வருமான வரி ரெய்டு குறித்து கேலி செய்த அஜித்
தல அஜித் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் தனது வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு வந்த போது நடந்த சம்பவம் குறித்த கேலியுடன் கூறியதை பத்திரிகை செய்தியாக தற்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தற்போது விஜய் மற்றும் பிகில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் வீடுகளில் ரெய்டுகள் நடந்துள்ள நிலையில் இந்த செய்தியை பல ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது,.
சில ஆண்டுகளுக்கு முன்னர் அஜீத் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு செய்தபோது தன்னுடைய வீட்டில் காணாமல் போன பல பொருள்கள் அப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அப்போது நடந்த வருமான வரி ரெய்டு அஜித் எந்த தவறும் செய்யவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது