வரும் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் ஒப்புகைச்சீட்டு உறுதி: தேர்தல் ஆணையம்

election commission

வரும் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் ஒப்புகைச்சீட்டு உறுதி: தேர்தல் ஆணையம்

election commissionவரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகைச்சீட்டு 100% அமலாகும் என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.

இதனையடுத்து தேர்தல் ஆணைய உறுதியை ஏற்று இதுகுறித்த வழக்கை முடித்து வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக இந்த ஒப்புகைச்சீட்டை காண்பித்தால் பணம் கொடுப்போம் என்று அரசியல் கட்சிகள் கூற வாய்ப்பு இருப்பதாகவும், முறைகேட்டிற்கு இந்த ஒப்புக்கைச்சீட்டே காரணமாக அமையும் என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply