வளரும் நாடுகள் பட்டியல்: 40வது இடத்தில் இந்தியா

வளரும் நாடுகள் பட்டியல்: 40வது இடத்தில் இந்தியா

உலக பொருளாதார நிறுவனத்தின் வளரும் நாடுகள் தர வரிசையில் இந்தியா 40வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது.

உலக பொருளாதார நிறுவனம் (World Economic Forum) 2016–17ஆம் ஆண்டுக்கான வளரும் நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 137 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு, கல்வி, தொழிலாளர் திறன், பொருளாதார வளர்ச்சி உட்பட 12 அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த பட்டியில் வெளியிடப்பட்டுள்ளதாக உலக பொருளாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்பட்டியலில் சுவிட்சர்லாந்து தொடர்ந்து 9 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இப்பட்டியலில் 39வது இடத்தைப் பிடித்த இந்தியா, 40வது இடத்துக்குச் சறுக்கியுள்ளது. இப்பட்டியலில் உள்ள பிரிக்ஸ் நாடுகளின் வரிசையில் இந்தியா 3வது இடத்தைப் பெறுகிறது. தெற்கு ஆசியாவில் முதலாவதாகவும் உள்ளது.

பாகிஸ்தான் கடந்த ஆண்டு வகித்த 122வது இடத்தில் இருந்து 115வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply