உலகிலேயே அதிகளவு குழந்தைகள் திருமணம் நடைபெறுவதாக கூறப்படும் ஈரானில், தற்போது வளர்ப்பு மகளை தந்தையே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற புதிய சட்டம் அமலாகியுள்ளது. இந்த சட்டத்திற்கு அந்நாட்டு எம்.பிக்கள் ஆதரவாக ஓட்டு போட்டுள்ளனர். இருப்பினும் இந்த சட்டம் ஈரான் பாதுகாவலர் கவுன்சிலின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த கவுன்சிலில் உள்ள மத குருக்கள் மற்றும் நீதிபதிகள் இந்த சட்டம் குறித்து ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பார்கள் என்றும் ஈரானின் சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஈரான் நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10 முதல் 14 வயதுக்குட்பட்ட 42 ஆயிரம் குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக ஒரு சர்வே கூறுகின்றது
ஈரான் தலைநகர் டெக்ரானில் தான் அதிகளவு குழந்தைகள் திருமணம் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து கவலையடைந்த சமூக ஆர்வலர்கள் குழந்தைகளை பாதுகாக்க புதிய சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று வற்புறுத்தியதை அடுத்து திருமண சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. அதில் ஒன்று தத்தெடுத்து வளர்க்கும் மகளை வளர்ப்பு தந்தையே திருமணம் செய்து கொள்ளலாம் என்பது ஆகும். ஆனால் வளர்ப்பு மகளை திருமணம் செய்து தந்தை அந்த பெண்ணைவிட 13 வயது அதிகமானவராக இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு உலகம் முழுவதிலும் உள்ள பெண் குழந்தை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வளர்ப்பு மகளாக இருந்தாலும், சொந்த மகளாகவே கருத வேண்டும் என்றும் இதை அனுமதிக்க கூடாது என்று பலர் ஃபேஸ்புக்,டுவிட்டரில் கூறி வருகின்றனர்.