வழிபாடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது: ஹெச்.ராஜா

வழிபாடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது: ஹெச்.ராஜா

சமீபத்தில் சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், தேவஸ்தானம் மத்தியில் அதிருப்தியும் ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெ.எச்.ராஜா, ‘ஒவ்வொரு கோவில் வழிபாட்டுக்கும் ஆகம விதிகள் உள்ளது, வழிபாடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று கூறியுள்ளார்.

முன்னதாக ஹெ.எச்.ராஜா தனது 61வது பிறந்தநாளையொட்டி சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து தங்க தேர் இழுத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.வி.சேகர் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply