வாக்களிக்காத இஸ்லாமியர்களுக்கு உதவி செய்ய மாட்டேன்: மேனகா காந்தி
பாஜக மூத்த தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை அத்தொகுதியில் அவரது மகன் வருண் காந்தி போட்டியிடுவதால் மேனகா காந்தி சுல்தான்பூர் தொகுதியில் களமிறங்கியுள்ளார், அங்கு அவர் ஒரு பிரச்சாரத்தில் பேசியதாவது:
நான் உறுதியாக இந்தத் தொகுதியில் வெற்றி பெற போகிறேன். ஆனால் இந்த வெற்றியில் இஸ்லாமியர்களின் பங்கு இல்லாவிட்டால் அது நன்றாக இருக்காது. அத்துடன் இங்குள்ள இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களிக்காமல் என்னிடம் வேலை கேட்டுவந்தால் அவர்களுக்கு நான் ஏன் உதவி செய்யவேண்டும். அதனால் எனக்கு வாக்களித்தால் நான் அவர்களுக்கு உதவி செய்வேன். மேலும் என்னுடைய வேலையை பற்றி நான் கடந்த முறை போட்டியிட்ட பிலிபிட் தொகுதியில் கேட்டுபாருங்கள்
மேனகா காந்தியின் இந்த சர்ச்சை பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது