வாக்காளர் பட்டியலை இனி நீங்களே திருத்தலாம்: தேர்தல் அதிகாரி
வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்ய செல்போன் ஆப் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், இணையத்தில் ஆதாரத்துடன் வாக்காளரே திருத்தம் செய்யலாம் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1.9.2019 முதல் 30.9.2019 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படும் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.