வாக்குப்பதிவின்போது நெஞ்சுவலியால் உயிரிழந்த பெண் தேர்தல் அதிகாரி!
இன்று 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடி ஒன்றில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் அலுவலர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட லோதிகேதா என்ற பகுதியில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அங்கு 50 வயதான சுனந்தா கோடேகர் என்ற பெண் அலுவலர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
நேற்று இரவு முதலே அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் மருத்துவ உதவியளிக்கும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தலைமை தேர்தல் அலுவலர் வி.எல். கந்த ராவ் தெரிவித்தார்.