வாக்கெடுப்பு நடக்குமா? திடீரென நீதிமன்றம் சென்ற குமாரசாமி

வாக்கெடுப்பு நடக்குமா? திடீரென நீதிமன்றம் சென்ற குமாரசாமி

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் அமளி காரணமாக சபாநாயகர் சட்டப்பேரவையை இன்று ஒத்திவைத்தார். இதனால் நேற்று நடைபெற வேண்டிய நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வில்லை.

இதனை அடுத்து பாஜக எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்தனர். இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மதியம் 1.30 மணிக்குள் நடத்த வேண்டும் என சபாநாயகர் முதல்வருக்கு அறிவுறுத்தியுள்ளார். எனவே இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஆளுநரின் வலியுறுத்தியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் குமாரசாமி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் இன்று மதியம் 1.30க்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு தடைவிதிக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்த பின்னரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிவதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு தொடர்ந்து கொண்டே உள்ளது

Leave a Reply