வாசல் கூட்டி கோலம் போடுவது தேசவிரோதமா? கனிமொழி
குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலம் போட்ட கல்லூரி மாணவிகள் இன்று காலை சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
போலீசார்களின் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் ஏற்கனவே தனது டுவிட்டரில் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார். அவர் கூறியதாவது: அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சென்னை பெசண்ட் நகரில் #CAA வுக்கு கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய, 6 பேரை அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளைக்கூட அனுமதிக்காத இந்தத் தரங்கெட்ட எடப்பாடி அரசின் காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்பப் பெறப்பட வேண்டும். மண்புழு அரசு மனித உரிமைகளை மதிக்க வேண்டும்!
இந்த நிலையில் சற்று முன்னர் திமுக எம்பி கனிமொழி அவர்கள் தனது டுவிட்டர் இணையதளத்தில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கூறியதாவது: நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவர்க்கும் உறுதி செய்து, தங்கள் எஜமானரின் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள்.