வாஜ்பாய் இறுதி ஊர்வலம் முடிந்ததும் கேரளா செல்லும் பிரதமர் மோடி

வாஜ்பாய் இறுதி ஊர்வலம் முடிந்ததும் கேரளா செல்லும் பிரதமர் மோடி

கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவாலும் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல ஆயிரம் கோடிக்கு பொருட்சேதத்தை இந்த வெள்ளம் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு முடிந்ததும், பெருமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று கேரளா செல்ல உள்ளார்.

இந்த பயணத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த தகவலை மத்திய மந்திரி அல்போன்ஸ் உறுதிபடுத்தியுள்ளார்.

Leave a Reply