வாட்ஸ் அப்-பில் வீடியோ காலிங் வசதி அறிமுகம்

வாட்ஸ் அப்-பில் வீடியோ காலிங் வசதி அறிமுகம்

1உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு மிகவும் எதிர்பார்த்த வீடியோ காலிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“கடந்த ஒரு வருடமாகவே எங்களது பயனாளர்கள் வீடியோ காலிங் வசதி வேண்டி கோரிக்கை விடுத்திருந்தனர். இறுதியாக வீடியோ காலிங் வசதியை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்துவதில் உற்சாகமாக உள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.

பயனாளர்கள் இந்த புதிய வீடியோ காலிங் வசதியைப் பெறுவதற்கு வாட்ஸ் அப்பை புதிதாக அப்டேட் செய்ய வேண்டும் என அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

எங்களது இந்தச் சேவை அனைத்துப் பயனாளர்களையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் எனவும் வாட்ஸ் அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ள இந்தப் புதிய வீடியோ காலிங் பயனாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஃபேஸ்புக் மூலம் ஒரு கோடிக்கு அதிகமான பயனாளர்கள் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மற்றும் விண்டோஸ் ஆகியவற்றின் மூலம் வீடியோ காலிங்கை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply