வாட்ஸ் அப் மூலம் ஹேக்கர்கள் ஊடுருவல்: அதிர்ச்சி தகவல்
வாட்ஸ் அப் மூலம் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சி நடப்பதாகா அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருசில வாட்ஸ் அப் பயனாளர்களை மட்டும் குறிவைத்து ஹேக்கர்கள் இந்த ஊடுருவலில் ஈடுபட்டதாகவும், ஹேக் செய்யப்பட வேண்டிய நபர்களுக்கு ஹேக்கர்கள் வாட்ஸ் அப் அழைப்பு கொடுப்பதாகவும், அதன் மூலம் செயலியை கண்காணிக்கும் சாப்ட்வேர் குறிப்பிட்ட செல்போனில் தானகவே இன்ஸ்டால் ஆகி அதன்பின் அந்த செல்போன் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்கு வருவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது
எனவே வாட்ஸ் அப் பயனாளர்கள் அனைவரும் உடனடியாக வாட்ஸ் அப் அப்டேட்டை செய்யும்படி அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.