வாரிசு துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சி அனுமதி இல்லை: அதிரடி அறிவிப்பு
வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஜனவரி 13-ஆம் தேதி முதல் சிறப்பு காட்சி அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
ஜனவரி 13 முதல் 16 ஆம் தேதி வரை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும் அதே போல் பேனர்கள் கட் அவுட் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
மேலும் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கக் கூடாது என்றும் டிக்கெட் கட்டணத்தை அதிகரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.