வார ராசிபலன். 20-07-2014 முதல் 26-07-2014 வரை

20072014உத்வேக மனதுடன் பணிபுரியும் மேஷராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இந்த வாரம். சுக்கிரன், ராகுவின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. புதன் வார பிற்பகுதி நாட்களில், நற்பலன் வழங்குகிறார். எவரிடமும் நட்பு பாராட்டுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும். வாகன பயன்பாடு அளவுடன் இருக்கும். புத்திரரின் ஆர்வமிகு பேச்சுக்கு, தடை போட வேண்டாம். எதிரியும், உங்கள் செயலின் சிறப்புக்களை உணர்வதற்கான வாய்ப்பு வரும்.இல்லறத்துணை உதவிகரமாக நடந்து கொள்வார். தொழிலில் உள்ள சிரமநிலையை, புது யுக்தியால் சரி செய்வீர்கள் பணவரவு சீராகும். பணியாளர்கள் தொழில் நுட்ப அறிவு வளர்த்துக் கொள்வர். குடும்ப பெண்கள், செலவுகளில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். மாணவர்கள் படிப்புக்கான பணவசதி கிடைத்து, மனதில் ஒருமுகத்தன்மை அடைவர்.

பரிகாரம்: சனிபகவானை வழிபடுவதுடன், மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு உதவுங்கள்.

 

நற்செயல்களால், பிறரை வசீகரிக்கும் ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இந்த வாரம் கேது, சுக்கிரன், சூரியன், செவ்வாய் சனி பகவானின் அமர்வு, சிறப்பான இடங்களில் உள்ளது. உங்களைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகளின் போக்கு உணர்ந்து செயல்படுவீர்கள். மனஅமைதி சில நன்மை கிடைக்கும். வீட்டுத்தேவை நிறைவேற்றுவதில், அக்கறை கொள்வீர்கள். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.புத்திரரின் செயல்களில் உள்ள குறையை சரி செய்வதில் நிதானம் வேண்டும். உடல் நலம் ஆரோக்கியம் பெறும். வழக்கு, விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர் உதவுவர். தொழிலில் அதிக மூலதனத்துடன் அபிவிருத்தி பணிபுரிவீர்கள். பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, சலுகை பெற அனுகூலம் உண்டு.பெண்கள் குடும்பநலன் பேணுவதில், கூடுதல் கவனம் கொள்வர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பாராட்டு, வெகுமதி பெறுவர்.

பரிகாரம்: அஷ்ட லட்சுமியை வழிபடுவதுடன், ஆதரவற்ற வயதான பெண்ணுக்கு உதவலாம்.

 

அடுத்தவர் நலனிலும், அக்கறை கொண்ட மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசியில் உள்ள சுக்கிரன், இரண்டாம் இடத்தில் உள்ள குரு மட்டுமே, அதிக அளவில் நற்பலன் தருகின்றனர். பிறரை வசீகரிக்கும் வகையில் நடை, உடை, செயல்களில் மாற்றம் பின்பற்றுவீர்கள். பணவரவு அதிகம் கிடைக்க, புதிய வாய்ப்பு உருவாகும். அவமரியாதை செய்யும் விதமாக பேசுபவரிடம் விலகவும். வாகனத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வது நல்லது.புத்திரரின் செயல்களை கண்காணித்து, பாதுகாப்பாக வழி நடத்துவது அவசியம். உடல் நலத்திற்கு, மருத்துவ சிகிச்சை உதவும். இல்லறத்துணை அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணியாளர் சிறப்பாக பணிபுரிந்து, நன்மதிப்பு சலுகை பெறுவர். பெண்கள் விதவிதமான உணவு தயாரித்து, குடும்ப உறுப்பினர்களின் விருப்பம் நிறைவேற்றுவர். மாணவர்கள், நண்பர்களிடம் படிப்பு தவிர பிற விவாதம் வேண்டாம்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதுடன், அறிவில் சிறந்த மாணவரின் படிப்புக்கு உதவுங்கள்.

 

உலக நிகழ்வுகளை அறிவதில், ஆர்வமுள்ள கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இந்த வாரம், மூன்றாம் இடத்தில் உள்ள ராகு பன்னிரெண்டில் இடம் பெற்ற சுக்கிரன், நற்பலன் தருகின்றனர். மனதில் நம்பிக்கை வளர்ப்பதால், புதிய செயல்களில் கிடைக்கிற நன்மையின் அளவு கூடும். சான்றோரின் வழிகாட்டுதல், வாழ்வில் வளர்ச்சி பெற புதிய பாதையைத் தரும். உடன் பிறந்தவர் உதவுவர். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு பின்பற்றவும்.புத்திரரின் சேர்க்கை சகவாசம் அறிந்து, சில மாற்றம் கொண்டுவர உதவுவீர்கள். இல்லறத்துணையின் கருத்துக்கு, முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரம் சுமுகமாக அமைந்திட வழிவகை காண்பீர்கள். இயந்திர பிரிவு பணியாளர், பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள், சேமிப்பு பணத்தில் சிறு செலவுகளை மேற்கொள்வர். மாணவர்கள், சாகசமான விளையாட்டுக்களில் ஈடுபடக்கூடாது.

பரிகாரம்: அன்னை மீனாட்சியை வழிபடுவதுடன், உறவினர் பெண்ணின் திருமணச் செலவுக்கு உதவலாம்.

 

லட்சியம் நிறைவேற்றுவதில் மனஉறுதி கொண்ட சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றில் செவ்வாய், சனி, லாப ஸ்தானத்தில் சுக்கிரன், அனுகூல அமர்வில் உள்ளனர். புதன் வார முற்பகுதி நாட்களில் நற்பலன் தருகிறார். சொல்லும், செயலும் ஆதாயம் பெற்றுத் தருவதில் முதன்மையாக இருக்கும். நற்பெயர், புகழ் கிடைத்து மகிழ்வீர்கள். வீட்டை அழகுபடுத்த கலைஅம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். புத்திரரின் பேச்சை பொறுமையுடன் கேட்பதால், அவர்கள் மனதில் தன்னைப் பற்றிய நம்பிக்கை வளரும். நிர்ப்பந்த பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணையின் ஆலோசனை மனதில் நல்ல மாற்றம் உருவாக உதவும். தொழிலில் இடையூறு விலகி, முன்னேற்றம் உருவாகும். பணியாளர் கூடுதல் அளவில் வேலைவாய்ப்பு, சம்பளம் பெறுவர். பெண்கள், வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவர். மாணவர்கள், ஞாபகத்திறன் வளர்ந்து சிறந்த தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்:
பைரவரை வழிபடுவதுடன், தலைச்சுமையாக பொருட்கள் விற்பவருக்கு உதவலாம்.

 

நண்பரின் நல்ல கருத்துகளை மதித்து செயல்படும் கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் சூரியன், உச்சம் பெற்ற குரு, அனுகூலமாக உள்ளனர். இந்த வாரம், பத்து, பதினொன்றாம் இடங்களில் சஞ்சாரம் செய்கிற புதன், முழு அளவில் நற்பலன் தருகிறார். பேசும் வார்த்தையில் நிதானமும், பிறர் நலன் பற்றிய அக்கறையும் பின்பற்றுவது நற்பெயரை பாதுகாக்க உதவும். வீடு, வாகனத்தில் கூடுதல் பயன்பாட்டு வசதி பெற மராமத்து பணிபுரிவீர்கள். புத்திரர் கல்விஅறிவு, செயல்திறனில் முன்னேற்றம் பெறுவர். எதிர்ப்பாளரிடம் விலகுவது நல்லது. இல்லறத்துணை கருத்துகளை விமர்சிக்க வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து, உபரி பணவரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர், பணியாளர்களை ஊக்கப்படுத்தி பணி இலக்கு நிறைவேற்றுவர். பெண்கள், கணவரின் அனுமதியின்றி பிறருக்காக, பணப்பொறுப்பு ஏற்கக் கூடாது. மாணவர்கள், நன்றாக படித்து பாராட்டு, வெகுமதி பெறுவர்.

சந்திராஷ்டமம்:
19.7.14 இரவு 12:01 மணி முதல் 21.7.14 மாலை 3:25மணி வரை.

பரிகாரம்: ராமபிரானை வழிபடுவதுடன், சகோதர பாசத்துடன் ஏழைக்கு உதவலாம்.

 

மனதிற்கு சரியெனப்பட்டதை துணிந்து செயல்படுத்தும் துலாம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இந்த வாரம் கேது, சுக்கிரன், சூரியன் அனுகூல பலன் தருகிற இட அமர்வில் உள்ளனர். பணம், கொடுக்கல் வாங்கல் சீராகும். உங்களின் நலம் விரும்புபவர் தாமாக முன் வந்து உதவுவர். ராசியில் உள்ள சனி, செவ்வாய் கடந்த கால பாதிப்புக்கு நிவாரணம் தரும் விதமான பலன் தருவார். வீடு, வாகனம் புதிதாக வாங்குகிற முயற்சி நிறைவேறும். புத்திரர் மனதில் சாந்த குணம் வளர்க்க தேவையான அறிவுரை சொல்வீர்கள். எதிரியால் உருவான சிரமம் இஷ்ட தெய்வ அருளால் விலகும். இல்லறத்துணை, உங்களின் நல்ல குணம் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் அரசு வகை உதவி பெற அனுகூலம் உண்டு. பணியாளர், புதிய முயற்சிகளால் பணித்திறன் வளர்த்துக் கொள்வர். பெண்கள், குடும்ப பண வசதிக்கேற்ப புத்தாடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள், படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.

சந்திராஷ்டமம்: 21.7.14 மாலை 3:26மணி முதல், 23.7.14 இரவு 11:33மணி வரை.

பரிகாரம்: சூரிய பகவானை வழிபடுவதுடன், தந்தையின் அறிவுரையை ஏற்று செயல்படுவது நன்மை தரும்.

 

நல்லவர்களின் நட்பினை போற்றி பாதுகாக்கும் விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன், ஒன்பதாம் இடத்தில் உச்சம் பெற்ற குரு, பதினொன்றில் உள்ள ராகு நற்பலன் தருகின்றனர். வார முற்பகுதி நாட்களில் புதன், வாழ்வில் பல சிறப்பு உருவாக உதவுகிறார். பேச்சு இனிதாக அமைந்து புகழ், மன அமைதியை தரும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவதால் பயணம் எளிதாகும். புத்திரர் உடல் நல ஆரோக்கியம் சீராக, சத்தான உணவு கொடுக்கவும். எதிரியின் துன்பம் கண்டு இரங்குகிற மனப்பான்மை ஏற்படும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிதான அணுகுமுறை பின்பற்றவும். பணியாளர்களின் தாழ்வு மனப்பான்மை விலகும். பெண்கள், கணவரின் அன்பு, தாராள பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள், ஆசிரியரின் வழிகாட்டுதல் பின்பற்றி உரிய நன்மை பெறுவர்.

சந்திராஷ்டமம்:
23.7.14 இரவு 11:34 மணி முதல் 26.7.14 காலை 9:58மணி வரை.

 

சூழ்நிலை உணர்ந்து, செயல் மேற்கொள்ளும் தனுசு ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் சனி, செவ்வாய் அனுகூலமாக உள்ளனர். புதன் வார பிற்பகுதி நாட்களில், சில நன்மை வழங்குகிறார். உங்கள் சொல்லும், செயலும் சிறப்பாக அமைந்து, ஆதாயபலன் பெற்றுத்தரும். உடன் பிறந்தவரின் வாழ்வு சிறக்க, இயன்ற உதவி புரிவீர்கள். நம்பகக் குறைவானவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம்.புத்திரர் நற்செயல்களால், பெருமை தேடித்தருவர். அறிமுகம் இல்லாத பெண்ணிடம், விவாதம் கூடாது. இல்லறத்துணையின் மனதில், உங்கள் மீதான நம்பிக்கை குறையாமல் நடந்து கொள்ளவும். தொழில், வார பிற்பகுதி நாட்களில் அளப்பரிய வளர்ச்சி ஏற்படும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், உறவினர் குடும்ப விவகாரம், கணவரிடம் பேசவேண்டாம். மாணவர்கள், அறிவுத்திறன் மிகுந்த ஒருவரின் அன்பு, நட்பினை பெறுவர்.

சந்திராஷ்டமம்: 26.7.14 காலை 9:59 மணி முதல் அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதுடன், ராமநாமம் சொல்வதால், மங்கல நிகழ்வு உண்டாகும்.

 

இயன்ற அளவில், அறப்பணிபுரிந்து மகிழும் மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றில் கேது, ஏழாம் இடத்தில் குரு அனுகூலமாக உள்ளனர். வார முற்பகுதி நாட்களில், புதனின் அமர்வு சிறப்பாக உள்ளது. ஞான சிந்தனையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு அவசியம்.புத்திரர் செயல்களில் குளறுபடி உருவாகலாம். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத்துணையின் பாராட்டு, மனதில் உத்வேகம் தரும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனத்துடன், கூடுதல் உழைப்பு சிரமம் தவிர்க்கும். பணியாளர் பணக்கடன் பெறுவதில், கெடுபிடிகுணம் இல்லாதவரிடம் வாங்குவது நல்லது. குடும்ப பெண்கள், செலவினங்களில் சிக்கனம் பின்பற்றுவது நல்லது. மாணவர்கள், அதிக முயற்சியால் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கலாம்.

பரிகாரம்: தன் வந்தரி பகவானை வழிபடுவதுடன், ஏழை முதியவரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவலாம்.

 

பணவரவுக்கேற்ப, செலவுகளை திட்டமிடும் கும்ப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சுக்கிரன், ஆறாம் இடத்தில் சூரியன் அனுகூலமாக உள்ளனர். புதன் வார பிற்பகுதி நாட்களில், நலம் பலவும் வழங்குகிறார். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். உடன் பிறந்தவரின் கவனக்குறைவை சரி செய்ய உதவுவீர்கள். வாகன பயன்பாடு, சராசரி அளவில் இருக்கும்.புத்திரர், உங்கள் சொல்கேட்டு நடந்து கொள்வர். எதிரி உங்களின் வாழ்வியல் சிறப்பு கண்டு விலகுவர். இல்லறத்துணை ஒற்றுமை குணத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறு தாமதமின்றி சரி செய்வது அவசியம். பணியாளர், நிர்வாகத்தின் சட்டதிட்டம் அக்கறையுடன் பின்பற்ற வேண்டும். பெண்கள், குடும்ப உறவுகளை பேணிக்காத்திடுவர். மாணவர்களுக்கு, படிப்புக்கான பணவசதி கிடைக்கும்.

பரிகாரம்:
சிவனை வழிபடுவதுடன், சிவனடியார்க்கு புத்தாடை தானம் வழங்கலாம்.

 

வாக்குறுதி தருவதில், நிதானம் பின்பற்றுகின்ற மீனராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சுக்கிரன், ஐந்தில் குரு அனுகூலமாக உள்ளனர். புதன் வாரமுற்பகுதி நாட்களில் நற்பலன் வழங்குகிறார். உடல்நல ஆரோக்கியம் பேணுவதால், மனம், செயலில் புத்துணர்வு ஏற்படும். அவசியமற்ற பேச்சு தவிர்ப்பதால், நற்பெயர் பாதுகாக்கலாம். உறவினரின் வருகை, சில மாற்றங்களை உருவாக்கும்.புத்திரரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். எதிரியின் மறைமுக விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். இல்லறத்துணை பெருந்தன்மையுடன் உங்கள் பணி சிறக்க உதவுவார். தொழில், வியாபாரத்தில் அரசின் சட்டதிட்டம் முறையாக கடைப்பிடிப்பது அவசியம். பணியாளர், பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். பெண்கள், பிரார்த்தனை நிறைவேற தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள், ஒவ்வாத உணவு வகை உண்ணக்கூடாது.

பரிகாரம்: விநாயகருக்கு அவல், பொரி, வெல்லப்பொடி கலந்து, நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கலாம்.

 

 

Leave a Reply