விக்கிரவாண்டி-நாங்குநேரி: முதல்சுற்று முடிவில் அதிமுக முன்னிலை!
விக்கிரவாண்டி, நாங்குநேரி, ஆகிய 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் இரண்டு தொகுதியிலும் முன்னணியி உள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் முதல் சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 5312 வாக்குகளும், திமுக வேட்பாளர் புகழேந்தி 3265 வாக்குகளும் பெற்றுள்ளனர். முத்தமிழ்ச்செல்வன் 2047 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
அதேபோல் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 6300 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 4700 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் 1600 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் புதுச்சேரி காமராஜ் நகரில் போட்டியிட்ட திமுக கூட்டணீயின் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனைவிட 7171 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.