விக்ரம் லேண்டரை மீட்க நாசா செய்யும் கடைசி முயற்சி

விக்ரம் லேண்டரை மீட்க நாசா செய்யும் கடைசி முயற்சி

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2வில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரில் இருந்து இன்னும் எந்தவிதமான சமிக்ஞைகளும் கிடைக்காத நிலையில் கடைசி முயற்சியாக நாசாவின் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டர் அருகே நகர்த்தி புகைப்படம் எடுக்கப்பட்டது

இந்த புகைப்படம் இன்று நாசாவுக்கு கிடைக்கும் என்றும், இந்த புகைப்படத்தை நாசா, இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த புகைப்படம் துல்லியமாக இருக்கும் என்பதால் இதில், விக்ரம் லேண்டருக்கு ஏற்பட்ட பாதிப்பு தெரிய வரும் என்றும், அந்த பாதிப்பை சரிசெய்துவிட்டால் லேண்டர் செயல்பட தொடங்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாசாவின் இந்த கடைசி முயற்சி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply