விக்ரம் லேண்டர் சந்திரனில் இறங்குவது எப்போது? இஸ்ரோ அறிவிப்பு

விக்ரம் லேண்டர் சந்திரனில் இறங்குவது எப்போது? இஸ்ரோ அறிவிப்பு

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜுலை 22ஆம் தேதி சந்திரயான் 2 என்ற விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிலையில் இதில் உள்ள விக்ரம் லேண்டர் நாளை அதிகாலை 1.30 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது

மேலும் விக்ரம் லாண்டரில் இருந்து ரோவர் நாளை காலை 5 மணிக்கு பிரிந்து தென் துருவத்தை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுக்கும். இதனால் இதுவரை மர்மமாக இருந்த நிலவின் தென் துருவம் குறித்து பல உண்மைகள் தெரிய வரும்

விக்ரம்லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் காட்சியை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து பிரதமர் மோடி நேரடியாக பார்வையிடவுள்ளார்

Leave a Reply