விக்ரம் லேண்டர் செயலிழக்கவுள்ள கடைசி நிமிடத்தில் இஸ்ரோவின் அதிரடி அறிவிப்பு

விக்ரம் லேண்டர் செயலிழக்கவுள்ள கடைசி நிமிடத்தில் இஸ்ரோவின் அதிரடி அறிவிப்பு

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி சென்ற விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் கடைசி நேரத்தில் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் பெற இஸ்ரோவும் நாசாவும் பெரும் முயற்சி எடுத்தும் முடியாத நிலையில் இன்றுடன் விக்ரம் லேண்டர் நிரந்தரமாக செயலிழக்க உள்ளது

இந்த நிலையில் சற்றுமுன் இஸ்ரோ தனது டுவிட்டரில், ‘சந்திரயான்-2 திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் திட்டமிட்டபடி பணியை தொடர்கிறது என்றும், விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு இழந்தது எப்படி என தேசிய நிபுணர்கள் குழு மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றும் அறிவித்துள்ளது

சந்திராயன் 2வில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் செயலிழந்தாலும் ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்படுவது இஸ்ரோவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது

Leave a Reply