‘விக்ரம் வேதா’ வதந்தியால் கடுப்பான தயாரிப்பு நிறுவனம்
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான வெற்றிப்படமான ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தை ரீமேக் செய்ய சரியான நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் இந்நிறுவனம் உள்ளது
இந்த நிலையில் இந்த படத்தின் ரீமேக்கில் தெலுங்கின் முன்னணி இரண்டு ஹீரோக்களான என்.டி.ஆர். பாலகிருஷ்ணா மற்றும் டாக்டர் ராஜசேகர் ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும் வதந்தி கிளம்பியது. இதனால் கடுப்பான ஒய்நாட் நிறுவனம் இதுகுறித்து ஒரு மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‘விக்ரம் வேதா’ தெலுங்கு ரீமேக் குறித்த தகவல் தங்கள் மூலம் வந்தால் மட்டுமே அது அதிகாரபூர்வமான செய்தி என்றும், அதுவரை இதுபோன்ற வதந்திகளை நம்பி ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது