விசாரணைக்கு வந்த பூவியாபாரி விஷம் குடித்ததால் பரபரப்பு
ஈரோட்டில் விசாரணைக்கு வந்த பூ வியாபாரி காவல் நிலையத்தில் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக போலீஸ் லாக்கப் சாவுகள் அதிகரித்து வருகிறது. அதேபோல் விசாரணைக்கு அழைத்து செல்பவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைவதாகவும் கூறப்படுவதுண்டு.
இந்த நிலையில் ஈரோடு காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பூ வியாபாரி யூசப் என்பவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து விஷம் குடித்த பூ வியாபாரி உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது