விசா இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்ற தெய்வம்: கி.வீரமணியின் கிண்டல்
விசா இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்ற தெய்வம் மீண்டும் தமிழகம் வரும் என எதிர்பார்க்கலாம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கிண்டலுடன் கூடிய ஒரு கருத்தை தெரிவித்துள்ளதால் இந்துமதத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நேற்று சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐக்கு வழக்கை மாற்ற சென்னை ஐகோர்ட் தடை விதித்ததோடு, பொன் மாணிக்கவேல் அவர்களை இந்த பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாகவும் நியமனம் செய்தது.
இந்த வழக்கின் உத்தரவு குறித்து கருத்து கூறிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ‘இனி தெய்வங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும், விசா இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்ற தெய்வம் மீண்டும் தமிழகம் வரும் என எதிர்பார்க்கலாம் என்று கிண்டலுடன் கூடிய ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். கி.வீரமணியின் இந்த கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.