விசா இல்லாமல் வெளிநாட்டு பயணம்: சிங்கப்பூர் முதலிடம், இந்தியா 75வது இடம்
சிங்கப்பூரில் விசா இல்லால் 159 நாடுகளுக்கு செல்லக்கூடிய புதிய பாஸ்போர்ட் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
உலக நாடுகளின் பாஸ்போர்ட் தரத்தை குறித்து சர்வதேச ஆய்வு நிறுவனமான ஆர்டான் கேபிடல், தரவரிசையை வெளியிட்டுள்ளது.
அதில், விசா இல்லாமலே பயணம் செய்ய அனுமதி வழங்கும் முதல் 10 பாஸ்போர்ட்டுகள் பட்டியலை கூறியுள்ளது. அந்த வரிசையில், முதல் இடத்தில் சிங்கப்பூர் 159 புள்ளிகளை கொண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தை நாட்டின் பாஸ்போர்ட்டைக் கொண்டு விசா இல்லாமலே 159 வெளிநாடுகளுக்குச் செல்ல முடியுமாம்.
இரண்டாவது இடத்தில், 158 புள்ளிகளுடன் ஜெர்மனி நாடும், 154 புள்ளிகளைப் பெற்று அமெரிக்கா 6 வது இடத்திலும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில், 51 புள்ளிகளைப் பெற்று 75 வது இடத்தில் உள்ளதாகவும் ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.