விஜய்சேதுபதிக்காக தீபாவளியை விட்டுக்கொடுத்தாரா விஜய்?
விஜய்யின் ‘பிகில்’ தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ ரிலீஸ் ஆவதால் ‘பிகில்’ படம் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
விஜய்சேதுபதிக்காக ‘பிகில்’ குழுவினர் விட்டுக்கொடுத்ததாக கூறப்படினும் இந்த படம் சென்சார் ஆவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால்தான் படம் தள்ளிப்போவதாகவும் கூறப்படுகிறது
இருப்பினும் ‘பிகில்’ தீபாவளி ரிலீஸ் உறுதி என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஒருதரப்பினர் கூறி வருகின்றனர்.
பிகில்’ தீபாவளி ரிலீஸா? இல்லையா? என்பதை படக்குழுவினர்களே உறுதி செய்தால் இந்த வதந்திகளுக்கு இடமிருக்காது என்பதே விஜய் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது