விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மகன்
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் ‘லாபம்’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் கலையரசன் இணைந்துள்ளதாக நேற்று ஒரு செய்தி வந்தது
இதனையடுத்து இந்த படத்தில் நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரித்வி இணைந்துள்ளதாக சற்றுமுன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரித்விக்கு சிறிய கேரக்டர் என்றாலும் அவரது கேரக்டர் ரசிகர்கள் மனதில் பதியும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது என கூறப்படுகிறது
எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் டி இமான் இசையில், ராம்தேவ் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை விஜய்சேதுபதி தயாரித்து வருகிறார்.