விஜய்சேதுபதி : அண்ணன் படத்தில் வில்லன், தம்பி படத்தில் ஹீரோ
பிரபல தெலுங்கு நடிகர் பஞ்ச வைஷ்ணவ தேஜ் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக நேற்று செய்திகள் இணையதளங்களில் பரவியது
இந்த நிலையில் இன்று விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கும் விஜய்சந்தர் இயக்கும் படத்தில் பஞ்ச வைஷ்ணவ தேஜ் அவர்களின் சகோதரர் சாய் தரம்தேஜ் என்பவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். ஒரே நேரத்தில் அண்ணன் தம்பிகள் நடிக்கும் படங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் விஜய்சேதுபதி நடித்து வருகிறார் என்பது கோலிவுட் திரையுலகில் ஒரு ஆச்சரியமான செய்தி ஆகும்
விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நிவேதா பேத்ராஜ் நடிக்கவுள்ளார்.