விஜய்யிடம் வாழ்த்து பெற்ற அறிமுக நடிகர்
தளபதி விஜய் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் வானொலி ஆர்ஜே மிர்ச்சி ஷா கலந்து கொண்ட நிலையில் விஜய்யிடம் அவர் வாழ்த்து பெற்றார்.
மிர்ச்சி ஷா, நேற்று வெளியான ‘துப்பாக்கி முனை’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார் என்பதும் அவருடைய கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மிர்ச்சி ஷா தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
துப்பாக்கி முனை படத்திற்காக ஆசிர்வாதம் கேட்டேன்!!!
ஷா ரொம்ப நல்லா பண்ணி இருக்கன்னு Feedback வருது!!
பெரிசா வா நண்பா என்றார்
கட்டி அணைத்தபடி!!
தளபதி தரிசனம் கிடைச்சிருச்சி”