விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு எப்போது?
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் சர்கார் படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அரசியல் த்ரில் கதையாக உருவாகும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. விறுவிறுப்பாக இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நடந்துவந்தன.
இட்ந்ஹ படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், அக்டோபர் 2-ம் தேதி ஆடியோ வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகளுக்குக்கான படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து விட்டது.
இந்த நிலையில் ‘சர்கார்’ படத்தில் தனது பங்களிப்பு முடிந்தவிட்டதால் தனது் தனது அடுத்த படம் பற்றி அறிவிப்பை மிக விரைவில் வெளியிடவுள்ளாராம். விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்கவுள்ளது கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட போதிலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.