விஜய்யின் ‘பிகில்’: இன்று மாலை 6 மணிக்கு தரமான சம்பவம்

விஜய்யின் ‘பிகில்’: இன்று மாலை 6 மணிக்கு தரமான சம்பவம்

விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தின் சூப்பர் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். அதிகாலையிலேயே ஒரு உற்சாகம் தரும் செய்தியை அளித்த அர்ச்சனாவுக்கு விஜய் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இன்று வெளியாகவிருக்கும் அறிவிப்பு பொதுவாக ரிலீஸ் படங்களுக்கு வரும் அப்டேட்டுகளான சிங்கிள், டீசர், டிரைலர், இசை வெளியீடு தேதி , ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இல்லை என்றும் இது யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான அறிவிப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply