விஜய்யை இழுக்க போட்டா போட்டி போடும் காங்கிரஸ்-திமுக: பரபரப்பு தகவல்

விஜய்யை இழுக்க போட்டா போட்டி போடும் காங்கிரஸ்-திமுக: பரபரப்பு தகவல்

நடிகர் விஜய் வீட்டில் சமீபத்தில் வருமான வரி சோதனை நடந்த போது அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டன

குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் பொது பிரச்சனைக்கு கூட இல்லாத வகையில் இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் விஜய்யை காங்கிரஸ் பக்கம் இழுக்க காங்கிரஸ் தலைவர்கள் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு செய்தியாளர்களிடம் இன்று பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் ’விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர நினைத்தால் அவரை மனமார வரவேற்போம் என்றும் ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அவர் வரவேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்

இருப்பினும் மறைமுகமாக காங்கிரஸ் கட்சிக்கு அவரை இழுக்க முயற்சி நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் திமுகவும் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply