விஜய்யை விசாரிக்க ஏஜிஎஸ் நிறுவனத்தில் சிக்கிய ஃபைல் தான் காரணமா? திடுக்கிடும் தகவல்!

விஜய்யை விசாரிக்க ஏஜிஎஸ் நிறுவனத்தில் சிக்கிய ஃபைல் தான் காரணமா? திடுக்கிடும் தகவல்!

நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஏஜிஎஸ் நிறுவனத்தில் காலை முதல் சோதனை நடத்தி வந்தனர் என்பது தெரிந்ததே

இந்த சோதனையின்போது ஒரு முக்கிய ஃபைல் சிக்கியதாகவும், அந்த பைலில் உள்ள தகவலின் அடிப்படையில் தான் விஜய்யை நேற்று அவர்கள் விசாரணை செய்ய சென்னைக்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது

அந்த ஃபைலில் விஜய்க்கு பிகில் படத்திற்காகஅளிக்கப்பட்ட சம்பளம் குறித்த விவரங்கள் இருப்பதாகவும் அந்த சம்பளத்தை விஜய்யிடம் உறுதி செய்யவே அவர் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது

இருப்பினும் இவை எல்லாம் பத்திரிகைகளில் வரும் செய்திகள் தானே தவிர வருமானவரித் துறை அதிகாரிகளிடம் இருந்தோ அல்லது விஜய் தரப்பில் இருந்தோ அதிகாரபூர்வமாக வெளிவந்த தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply