விஜய் அப்பா கேரக்டரில் கமல்?
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அரசியலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால் அடுத்தகட்டமாக தீவிர சினிமாவில் அவர் இறங்கவுள்ளாராம்
ஆனால் அவரது படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. இந்தியன் 2, சபாஷ் நாயுடு, மருத நாயகம், தேவர் மகன் 2 ஆகிய திரைப்படங்கள் வெறும் திட்டங்களில் மட்டுமே உள்ளது.
இந்த நிலையில் பெரிய நடிகர்களுக்கு அப்பா, அண்ணன் கேரக்டரில் நடிக்க முடிவு செய்துவிட்டாராம். முதல்கட்டமாக ‘தளபதி 64’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்க கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது