விஜய் என்ன சொன்னாலும் பிடிக்காது, நான் என்ன செய்ய…. உதயநிதி ஸ்டாலின்
விஜய் என்ன சொன்னாலும் அவர்களுக்கு பிடிக்காது, நாம் என்ன் செய்ய முடியும் என ‘பிகில்’ பட ஆடியோ விழாவில் பேசிய கருத்து குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேனர் கலாச்சாரம் குறித்து விஜய் பேசியதை இதுவரை திமுக தலைவர்கள் யாரும் கருத்து கூறாத நிலையில் நேற்று சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பேனர் குறித்த விஜய்யின் கருத்துக்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் கூறினார்.
‘நண்பர் விஜய் என்ன சொன்னாலும் அதிமுகவினர்களுக்கு பிடிக்காது என்றும், விஜய் எதுவும் தவறாக கூறியதாக தனக்கு தோன்றவில்லை என்றும் கூறிய உதயநிதி, பேனர் கலாச்சாரத்தை நிச்சயம் ஒழிக்க வேண்டுமென்றும் தங்கள் தலைவரும் மூன்று வருடமாக அதையேதான் சொல்லி வருவதாகவும், கடந்த சில நாட்களாக இளைஞரணி சார்பாக நடந்த எந்த விழாவிலும் பேனர் வைக்கவில்லை என்றும் உதயநிதி கூறியுள்ளார்.