விஜய் ஒரு தீவிரவாதி: அமைச்சர் சண்முகம்

விஜய் ஒரு தீவிரவாதி: அமைச்சர் சண்முகம்

விஜய் நடித்த ‘சர்கார்’ படம் குறித்து அரசியல்வாதிகள் பல்வேறு விமர்சனம் செய்து வரும் நிலையில் ‘படம் எடுக்கிறேன் என்ற போர்வையில் அரசின் திட்டங்களின் பொருட்களை எரிப்பது மிக மிக தவறு என்றும், நடிகர் விஜய் தீவிரவாதியைப்போல மக்களை வன்முறைக்குத் தூண்டிவிட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளார்.

மேலும் யாரோ ஒருவர் எழுதித் தரும் வசனதத்தை அப்படியே பேசி பேசி பழக்கப்பட்ட நடிகர்கள், அதேபோல் அரசியலிலும் வெறும் வசனம் பேசி மக்களிடம் தங்கள் நாடகத்தை அரங்கேற்ற பார்ப்பதாகவும், மக்கள் இதை எல்லாம் நம்ப மாட்டார்கள் என்றும், நடிகர்களை நம்பி நடிகர்கள் பின் செல்ல மக்கள் ஒன்று முட்டாள்கள் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

விஜய்க்கு வெளிநாட்டு சத்தியாளர்களுடன் தொடர்பு உள்ளது என்றும், தமிழகத்தில் எந்த நலத்திட்டமும் செயல்படக் கூடாது என வெளிநாட்டு சதிக்கூட்டத்துடன் சேர்ந்து செயல்படுகிறார்கள் என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Leave a Reply