விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் பெயர் என்ன ?
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி . சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பேட்ட’ படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்க்கு வில்லனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த மற்றொரு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டுவிட்டர் பக்கத்தில் வெளியானது . இந்த படத்தின் பெயர் ‘சிந்துபாத்’ என வைக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தனது பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
அருண்குமார் இயக்கத்தில் வெளியாக உள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் படத்தொகுப்பாளராக ரூபன் உள்ளார்.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்தை ராஜராஜன் தயாரிக்கிறார்.
விஜய்சேதுபதி, சிந்துபாத், யுவன்ஷங்கர் ராஜா, அருண்குமார்