விஜய் சேதுபதி பிறந்தநாளில் ’மாஸ்டர்’ படக்குழுவினர்களின் சிறப்பு பரிசு

விஜய் சேதுபதி பிறந்தநாளில் ’மாஸ்டர்’ படக்குழுவினர்களின் சிறப்பு பரிசு

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய், விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்புகள் இந்த வார இறுதியில் சென்னையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் லண்டனில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடி முடித்துள்ள விஜய் விரைவில் சென்னை திரும்ப உள்ளதாகவும் அவர் வந்த பின்னர் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக், வரும் 16ம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் வரும் 16ம் தேதி விஜய் சேதுபதியின் பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்களுக்கான சிறப்பு பரிசாக இந்த செகண்ட் லுக் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply