விஜய் மல்லையா தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி: நீதிமன்றம் அறிவிப்பு
இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தொழில் அதிபர் விஜய் மல்லையா தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி என பொருளாதார குற்றங்களை விசாரணை செய்யும் நீதிமன்றம் அறிவிப்பு செய்துள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து விஜய் மல்லையாவின் சொத்துக்கள் அரசினால் விரைவில் பறிமுதல் செய்யப்படும் என கூறப்படுகிறது