விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த ‘மெர்சல்’ ஏமாற்றம்
இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் தடைகள் பல தாண்டி வரும் தீபாவளி தினத்தன்று உறுதியாக வெளியாகும் என்று விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் எப்போது வரும் என்று விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் கேள்வி கேட்டவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு நெருக்கமானர்கள் கூறியபோது ‘மெர்சல்’ ரிலீசாக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளிவர வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதற்கு பதிலாக இன்னும் ஒருசில புரமோக்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
ஆனால் ‘மெர்சல்’ டிரைலர் வெளிவந்தால் யூடியூபில் இன்னுமொரு உலக சாதனையை படைக்கலாம் என்று எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக உள்ளது.