விடிய விடிய காவேரி மருத்துவமனை முன் நின்ற தொண்டர்கள்
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று அவருடைய உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்திகள் வெளிவந்ததால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நேற்று இரவே காவேரி மருத்துவமனை முன் குவிந்த திமுக தொண்டர்கள் போலீசார்களின் வற்புறுத்தலால் இரவு வீட்டிற்கு சென்று தற்போது மீண்டும் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் காவேரி மருத்துவமனை முன் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவங்களுக்கு இடம் கொடுக்காத வகையிலும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் போலீசார்களின் நடவடிக்கை இருப்பது ஆறுதலாக உள்ளது