ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த வந்த தம்பதிகள் முருகன் மற்றும் நளினி விடுதலைக்கு பின்னர் தங்கள் மகளை சந்திக்க லண்டன் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று காலை நளினியின் வழக்கறிஞர் வேலூர் சிறைக்கு சென்று நளினியை சந்தித்து பேசினார். பின்னர் சிறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் புகழேந்தி, ‘விடுதலைக்கு பின்னர் லண்டனில் வாழும் தங்கள் மகள் அரித்ராவுடன் சேர்ந்து வாழ முருகன் மற்றும் நளினி விரும்புவதாகவும், அவர்கள் இருவரும் விடுதலையாகி வெளியே வந்தவுடன் அவர்கள் லண்டன் செலவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறினார்.
இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணை செய்த வழக்கு என்பதால் மத்திய அரசின் அனுமதி தேவைப்படுகிறது என்றும், இன்னும் 3 நாட்களில் மத்திய அரசின் அனுமதி கிடைத்துவிடும் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.