விடுதலைச்சிறுத்தைகள் நிர்வாகியிடம் இருந்து ரூ.2.10 கோடி பறிமுதல்
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் கூறி வந்தாலும் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளூமே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டுதான் உள்ளது. உறுதியாக தோல்வி அடைந்துவிடுவோம் என்று தெரிந்த கட்சியினர்களும் பணம் இல்லாதவர்களும் மட்டுமே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில்லை
இந்த நிலையில் நீதி, நேர்மையின் வடிவமாக தன்னை கூறிக்கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சித்தது தற்போது தெரியவந்துள்ளது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று விசிக கட்சி நிர்வாகி ஒருவரின் காரில் சோதனை செய்தபோது அதில் ரூ.2.1 கோடி இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
ஆக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் வெற்றிக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் ஃபார்முலாவை பின்பற்றுகிறத் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது