விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இலங்கை அமைச்சர் மீது நடவடிக்கையா?
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய தமிழரான இலங்கை குழந்தைகள் நலத்துறை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, ‘இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகம் நடைபெற்ற போது சமூகத்தில் எந்த குற்ற சம்பவமும் நடைபெறவில்லை. இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை’’ என்று கூறினார்.
அமைச்சர் விஜயகலாவின் பேச்சுக்கு மற்ற அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று கடும் அமளியும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அமைச்சர் விஜயகலாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதுகுறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா கருத்து கூறியுள்ளார். அதில், ‘‘ராஜாங்க மந்திரி பதவியில் உள்ள ஒருவர் அவ்வாறு கருத்து வெளியிட முடியாது என்றார். மேலும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்