விடுதலைப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் உயர்வு

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, மக்களுக்கு அவர் உரையாற்றத் தொடங்கினார்.

விடுதலைப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ. 17 ஆயிரத்திலிருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் உரை:

மாநில அரசால் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ. 17 ஆயிரத்திலிருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ. 8,500-இல் இருந்து ரூ. 9,000 ஆக உயர்த்தப்படும்.” என்று கூறியுள்ளார்.