விண்ணில் சீறிப்பாய்ந்தது சந்திராயன் 2: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

விண்ணில் சீறிப்பாய்ந்தது சந்திராயன் 2: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

இஸ்ரோவின் சந்திராயன் 2 இன்று சரியாக 2.42 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது. இந்த விண்கலம் வெற்றிகரமாக தனது வட்டப்பாதையை அடைந்ததாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 

சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘சந்திரயான்-2’ விண்வெளி பயணத்துக்கான 20 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. இன்று காலை முதல் சந்திராயனை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். சந்திராயனை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் மற்றும் சி-25 எனப்படும் ‘கிரயோஜெனிக்’ படிநிலைக்கு திரவ ஹைட்ரோஜன் போன்றவை நிரப்பும் பணிகள் பிற்பகல் 1.40 மணியளவில் நிறைவடைந்தன. பிற்பகல் 1.43 மணியளவில் அடுத்த ஒரு மணி நேரத்துக்கான (3600 வினாடிகள்) இறுதிக்கட்ட கவுன்ட்டவுன் தொடங்கியது.

இதைதொடர்ந்து, திட்டமிட்டபடி சரியாக 2.43 மணிக்கு ‘சந்திரயான்-2’ வெற்றிகரமாக தனது விண்வெளி பயணத்தை தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஒருகட்டமாக சந்திரனை ஆய்வு செய்யும் அளப்பரிய பெரும்சாதனையாக ‘சந்திரயான்-2’ விண்கலம் இன்று வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.

Leave a Reply