விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு முதலுதவி செய்த அமைச்சர்
கோயம்புத்தூர் அவினாசி சாலையில் ஏற்பட்ட விபத்தில் பேபி என்ற பெண் காயமடைந்தார். அந்த நேரத்தில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக காரில் இருந்து இறங்கி காயம் அடைந்த அந்தப் பெண்ணிற்கு முதலுதவி செய்தார்.
அதன்பின் தன்னுடன் பாதுகாப்பிற்கு வ்ந்த வாகனம் ஒன்றை அளித்து அந்த பெண்ணை மேல்சிகிச்சைக்காக தனது அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தற்போது காயமடைந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்
அமைச்சரின் இந்த உதவியை அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.