விராத் கோஹ்லி அபார சதம்: 500 ரன்களை தாண்டியது இந்தியா
இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடி வருவதால் உணவு இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்துள்ளது. விராத்கோஹ்லி அபாரமாக விளையாடி தனது 24-வது சதத்தை பதிவு செய்தார். விராத் கோஹ்லியுடன் அருமையாக விளையாடிய பண்ட் 92 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நேற்றைய முதல் நாளில் அறிமுக வீரர் பிரித்வி ஷா சதத்தில் உதவியால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா வலுவான நிலையில் இருந்தது. முதல் நாளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது.
கேப்டன் விராட் கோலி 72 ரன்களுடனும் , விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் துவங்கியதும், விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட் மறுமுனையில் அதிரடியாக விளையாடினார். விராட் கோலி 120 ரன்களுடனும், ஜடேஜா 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்