விருப்பமின்றி கட்டாய மதமாற்றம் செய்தால் 7 வருடம் தண்டனை: புதிய சட்டம்

விருப்பமின்றி கட்டாய மதமாற்றம் செய்தால் 7 வருடம் தண்டனை: புதிய சட்டம்

ஒருவரை மத மாற்றத்திற்கு கட்டாயப்படுத்தினாலோ, தூண்டினாலோ 7 ஆண்டுகள் வரை தண்டனை என்ற சட்டவிரோத மதமாற்றத்தை தடுக்கும் புதிய மசோதாவை ஹிமாச்சல் பிரதேச அரசு நிறைவேற்றியுள்ளது

இந்த மசோதாவின்படி பட்டியலினத்தவர்கள், பெண்கள் அல்லது சிறுவர்களை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு சிறைத் தண்டனை இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை இருக்கும்.

மேலும் இதில் உள்ள மசோதாவின் 10 வது பிரிவு, இதன் விதிமுறைகளை மீறும் எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும் நாட்டிற்குள் அல்லது வெளியில் இருந்து எந்தவொரு நன்கொடை அல்லது பங்களிப்பையும் ஏற்க அனுமதிக்கப்படாது என்று கூறுகிறது.

Leave a Reply