தீவிர புயலாக மாறிய பெய்ட்டி: சென்னைக்கு ஆபத்தா?
வங்காள விரிகுடா கடலில் நிலை கொண்டுள்ள பெய்ட்டி புயல், நேற்று சென்னைக்கு தென்கிழக்கே 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும், இது தீவிர புயலாக மாறி வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதகவும் இந்த புயல் இன்று பிற்பகல் ஆந்திர கடற்கரை பகுதியான மசூலிப்பட்டினம் மற்றும் காக்கி நாடா ஆகிய பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலால் சென்னைக்கு பாதிப்பில்லை என்றாலும் சென்னை மற்றும் வட தமிழகத்தில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும், வட தமிழகத்தின் கடலோர பகுதியில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.